சன்மார்க்க உலகம் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் ! உலகில் முதன் முதலில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் .கொடுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கட்டாயப்படுத்தி சொன்னவர்.குரல் கொடுத்தவர் வள்ளலார் என்பது நிறைய பேருக்கு தெரியாமல் போனது வேதனைக்குறியதாகும். வள்ளலார் சொன்னது அருளால் சொன்னது.. இன்று பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் சம உரிமை வேண்டும் என்றும்.ஆலயங்களுக்கு உள்ளும் பெண்கள் போகலாம் என்றும் நீதி மன்றம் சொல்லி உள்ளது.. 1874 ஆம் ஆண்டே ஆண் பெண் பேதம் இல்லாமல் வழிபாடு செய்யலாம் வணங்கலாம் என்று… வடலூரில் சத்திய ஞானசபைத் தோற்றுவித்தவர் வள்ளலார். அன்றில் இருந்து இன்றுவரை.என்றும் ஆண் பெண் மட்டும் அல்ல.சாதி.சமய.மதம் அற்ற உலகின் பொது வழிபாட்டு முறையைக் கொண்டு வந்தவர் வள்ளலார்.. இறைவன் படைப்பில் ஆண்.பெண்.அலி என்ற பேதம் இருக்கக் கூடாது..என்றவர் வள்ளலார். உடல் உருப்புக்களில் பேதம் இருக்கலாம்.உயிரிலும்.ஆன்மாவிலும் பேதம் இல்லை என்பதால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்றவர் வள்ளலார்.. மனித நேயத்தை விட ஆன்மநேயம் தான் முக்கியமானது.உண்மையானது என்பதை விளக்கியவர் வள்ளலார். எனவே தான் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்றவர் வள்ளலார். மனித சக்தியால் சட்டத்தால் எதுவும் நடைபெறாது.இறை சக்தியால்.அருள் ஆற்றலால் எல்லாமே மாற்றம் அடையும். மனிதனைக் கொண்டே மாற்றத்தை உருவாக்குபவர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்…. வள்ளலார் பாடல் ! சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.! என்ற பாடல் வாயிலாக உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்கம் துலங்கும். எல்லா உலகும் தூய்மை உறும் . செத்தவர்களும் மீண்டும் உயிர்பெற்று எழுந்து வருவார்கள் என்கின்றார் வள்ளலார்.. எனவே இனிமேல் ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லோரும் சமம் என்ற நிலை உருவாகும் உருவாக்கப்படும். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சாது சிவராமன் சொற்பொழிவு